3ம் கட்டை மற்றும் அலஸ்தோட்டம் அபாகஸ் கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழா சிறப்புடன் நிறைவாக நடைபெற்றது

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை, 3ம் கட்டை மற்றும் அலஸ்தோட்டம் அபாகஸ் கல்வி நிலையத்தினால் தீபம் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அபாகஸ் பயிற்சியில் சிறந்த சாதனைகள் படைத்த 35 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.மைதிலி சேகரன் அவர்களும், கௌரவ விருந்தினராக நாலந்தா பாடசாலையின் ஆசிரியர் திருமதி.M.G.நிலூசிகா மதுமாலி அவர்களும்,சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் போதனா ஆசிரியரும் அபாகஸ் ஹை லெவல் இன்ஸ்டிட்யூட்டின் பணிப்பாளருமான திரு.B. கிறிஸ்தோபல் அவர்களும், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி.அழகேஸ்வரி யேசுராசா அவர்களும், Queen bee mini mart இன் உரிமையாளரும் சமூக சேவையாளருமான செல்வன்.றாஜிப் ராசலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.